நம் கணனியில் Viber பயன்படுத்துவது எப்படி...?

நம் கண்னியில் Viber பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம். தற்போது நாம் யாரிடம் பார்த்தாலும் அவர்களுடைய கையடக்க தொலைபேசியில் Viber மென்பொருள் இல்லாதவர்களே இல்லை. அப்படி இருக்கும்போது நாம் பயன்படுத்தும் Viber எனும் மென்பொருள் நமது கணனியிலும் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...?  ஆம் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதை தரவிறக்கம் செய்து நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்கள். இதை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள Download Viber என்பதை அழுத்துங்கள். 


01. RUN என்பதை அழுத்துங்கள்.


                                         02. Accept & Install என்பதை அழுத்துங்கள்.

                                 
                                           03. Installing ஆகும் வரை காத்திருங்கள்.


                                                 04. Yes  என்பதை அழுத்துங்கள்


05. இதை மிகவும் அவதானத்துடன் தொடர வேண்டும். அதாவது நீங்கள் இதில் பதிவு செய்ய நினைக்கும் தொலைபேசி இலக்கம் உங்களுடையதாக இருக்க வேண்டும். முதலில் நீங்கள் உங்களது நாடு எது என்பதை குறிப்பிட்டு பின் உங்களது  தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்துகொள்ளுங்கள் பெட்டியின்னுள் பதிவு செய்யும் தொலைபேசி இலக்கங்களுக்கே இரகசிய இலக்கம் அனுப்பப்படும். அந்த இரகசிய இலக்கம் எந்த இலக்கத்துக்கு அனுப்பப்படுகின்றதோ அந்த இலக்கத்தில்தான் கணனியில் Viber இயங்கும். இந்த பெட்டியினுள் பதிவு செய்யும் இலக்கத்தில் நீங்கள் உங்கள் தொலைபேசியில் Viber திறந்திருக்க வேண்டும். அப்படி திறக்கவில்லை என்றால் இரகசிய இலக்கம் அனுப்பப்படமாட்டது. நீங்கள் சாதரன தொலைபேசி பயன்படுத்துபவரா அப்படி என்றால் யாரவது உங்களுக்கு தெரிந்தவர்கள்  அல்லது உறவினர்களின் தொலைபேசியில் உங்கள் SIMஐ இட்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தில் Viber Active செய்து கொள்ளுங்கள். அதற்கு பின் உங்கள் கணனியில் உங்கள் இலக்கங்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.



06. நீங்கள் உங்கள் தொலைபேசியி இலக்கத்தில் Viber Active செய்யவில்லை என்றால் இப்படி வரும் அதனால் Viber Active செய்த இலக்கங்களை பதிவு செய்யுங்கள்.


07.உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் இரகசிய இலக்கத்தை இதனுள் பதிவு செய்து தொடருங்கள். Enter viber ஐ அழுத்துங்கள்.



How to Install Viber on Windows 8, 7 PC for Free Calling VIDEO 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget