பிள்ளையார் சுழி போட்டு நீ...!

பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
வள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்...
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு...!

ஊர் தோறும் குளத்தடியில் நம் கணபதி அமைந்திருப்பார்
ஒவ்வொரு மனிதனது நல் உள்ளத்திலும் குடியிருப்பார்
எல்லோரும் நலம் காண எண்ணுகின்ற மனிதருக்கு
எந்நாளும் விநாயகனின் திரு அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும் அவன் அருள் நலம் சேர்க்கும்...
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு...!

பெற்றோருக்கு மேலான உலகம் இல்லை என்றார்
கற்றோர்க்கு மேலான பெரியோர் இல்லை என்றார்
நற்றன விநாயகனை நாளும் தொழும் போது
அர்த்தம் புரிந்துவிடும்
திருள் அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும்
அவன் அருள் நலம் சேர்க்கும்...
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு...!

ஒருநாளில் ஒருவேளை ஐங்கரனை நினைத்துவிடு
உயிர்கள் யாவும் உந்தனது சொந்தம் என கருதிவிடு
நீயும் இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழ விடு...
இந்த எண்ணம் உனக்கிருந்தால்
திரு அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும்
அவன் அருள் நலம் சேர்க்கும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
வள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget