ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடல் வரிகள்...!


Aadaludan Paadalai Kettu Song Lyrics.

பெண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்.... ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹாஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்..

ஆண் :
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்...ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹாஹோய்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்

பெண் / ஆண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்..
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்

ஆண் :
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக......
அஹஹொய், அஹஹோய்

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக.......
அஹஹொய்,.......அஹஹோய்

பெண் :
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக......
அஹஹொய்,.. அஹஹொய்,.. அஹஹொய்

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக.....
அஹஹொய், அஹஹொய்
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
உரியவன் நீ தானே

பெண் / ஆண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்

ஆண் :
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு......
அஹஹொய்,... அஹஹொய்ஹோய்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு...
அஹஹொய்,... அஹஹொய்ஹோய்

பெண் :
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு...
ஒஹஹொய், ஒஹஹொய்,ஒஹஹோய்
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு...
ஒஹஹொய், ஒஹஹோய்
உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

பெண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்....ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய்
ஆண் :
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்....ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய்

பெண் / ஆண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்..

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget