பிரச்சனைகளுக்கு விவாகரத்து தேவைதானா?

ணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள்
வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை.
விவாகரத்து தேவைதானா? திருமணத்துக்கு முன்பு– திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு– பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள்.
தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை.
ஆனால், விவாகரத்து செய்தவுடன் ஆண் பெண் இருவரின் வாழ்க்கைகளும் சரியாகிவிடுவதில்லை. அதன் பின்னரும் கூட பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன.
ஆண்களும் விவாகரத்துக்கு பிறகு அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது.விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும்.
அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போகநேரிடும்.
அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும்.
அது நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும்.தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும், இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் சமுதாயத்தில் விடை தேடவேண்டிய அவசியமில்லை.
மாறாக அவர்களிடமே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விவாகரத்து செய்வது ஒன்றும் தவறில்லை, தினம் தினம் சண்டை சச்சரவுகளுக்கிடையே வாழ்வதைவிட, பிரிந்துவிடுவது மேல் என்று நினைக்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கெல்லாம், இவைதான் தீர்வு என்று கிடையாது.
ஆனால், பொறுமை, நிதானம் சகிப்புத்தன்மை என்பவை இருந்தால், வாழ்வில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget