May 2016

ணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள்
வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை.
விவாகரத்து தேவைதானா? திருமணத்துக்கு முன்பு– திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு– பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள்.
தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை.
ஆனால், விவாகரத்து செய்தவுடன் ஆண் பெண் இருவரின் வாழ்க்கைகளும் சரியாகிவிடுவதில்லை. அதன் பின்னரும் கூட பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன.
ஆண்களும் விவாகரத்துக்கு பிறகு அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது.விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும்.
அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போகநேரிடும்.
அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும்.
அது நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?’ என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும்.தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும், இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் சமுதாயத்தில் விடை தேடவேண்டிய அவசியமில்லை.
மாறாக அவர்களிடமே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விவாகரத்து செய்வது ஒன்றும் தவறில்லை, தினம் தினம் சண்டை சச்சரவுகளுக்கிடையே வாழ்வதைவிட, பிரிந்துவிடுவது மேல் என்று நினைக்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கெல்லாம், இவைதான் தீர்வு என்று கிடையாது.
ஆனால், பொறுமை, நிதானம் சகிப்புத்தன்மை என்பவை இருந்தால், வாழ்வில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நமது  கையடக்க தொலைபேசியில் பயன்படுத்தும் IMO எனும் மென்பொருளை நமது கணனியில் எப்பபடி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். நாம் அனைவரும் எத்தனையோ அழைப்பு மென்பொருளை பயன்படுத்தி இருக்கின்றோம், அதாவது Skype,Nimbuzz,Google telk,Yahoo messenger என்று இன்னும் பல மென்பொருள்களை நாம் அதிகளவில் பயன்படுத்தி இருக்கின்றோம், தற்போது அத்திகளவில் பேசப்படும் மென்பொருள்தான் IMO எனும் மென்பொருள் இத்தில் மிகத்தெளிவான முறையில் அழைப்புக்களை எற்படுத்த முடியும் என்ற விடயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதனால்தான் அனைவரும் இதை அதிகளவில் பயன்படுத்துகின்றனர், இந்த மென்பொருளை நாம் நமது கையடக்க தொலைபேசியில் பயன்படுத்துவதைப்போல் நமது கணனியில் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம். இந்த மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள், இது முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள் இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இரண்டு  Download imo என்பதை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முக்கியமான விடயம் இரண்டையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


                                             




அடுத்து புகைப்படத்தில் உள்ளதுபோல் பின்பற்றுங்கள்.


001

002

003

004

005


006


007




008

009

010

011


012

013





தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. 

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன. 

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். 

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். 

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. 

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. 

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. 

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. 

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. 

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது. 

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். 

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. 

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. 

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது. 

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். 

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. 

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது. 

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. 

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

நம் கண்னியில் Viber பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம். தற்போது நாம் யாரிடம் பார்த்தாலும் அவர்களுடைய கையடக்க தொலைபேசியில் Viber மென்பொருள் இல்லாதவர்களே இல்லை. அப்படி இருக்கும்போது நாம் பயன்படுத்தும் Viber எனும் மென்பொருள் நமது கணனியிலும் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...?  ஆம் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதை தரவிறக்கம் செய்து நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்கள். இதை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள Download Viber என்பதை அழுத்துங்கள். 


01. RUN என்பதை அழுத்துங்கள்.


                                         02. Accept & Install என்பதை அழுத்துங்கள்.

                                 
                                           03. Installing ஆகும் வரை காத்திருங்கள்.


                                                 04. Yes  என்பதை அழுத்துங்கள்


05. இதை மிகவும் அவதானத்துடன் தொடர வேண்டும். அதாவது நீங்கள் இதில் பதிவு செய்ய நினைக்கும் தொலைபேசி இலக்கம் உங்களுடையதாக இருக்க வேண்டும். முதலில் நீங்கள் உங்களது நாடு எது என்பதை குறிப்பிட்டு பின் உங்களது  தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்துகொள்ளுங்கள் பெட்டியின்னுள் பதிவு செய்யும் தொலைபேசி இலக்கங்களுக்கே இரகசிய இலக்கம் அனுப்பப்படும். அந்த இரகசிய இலக்கம் எந்த இலக்கத்துக்கு அனுப்பப்படுகின்றதோ அந்த இலக்கத்தில்தான் கணனியில் Viber இயங்கும். இந்த பெட்டியினுள் பதிவு செய்யும் இலக்கத்தில் நீங்கள் உங்கள் தொலைபேசியில் Viber திறந்திருக்க வேண்டும். அப்படி திறக்கவில்லை என்றால் இரகசிய இலக்கம் அனுப்பப்படமாட்டது. நீங்கள் சாதரன தொலைபேசி பயன்படுத்துபவரா அப்படி என்றால் யாரவது உங்களுக்கு தெரிந்தவர்கள்  அல்லது உறவினர்களின் தொலைபேசியில் உங்கள் SIMஐ இட்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தில் Viber Active செய்து கொள்ளுங்கள். அதற்கு பின் உங்கள் கணனியில் உங்கள் இலக்கங்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.



06. நீங்கள் உங்கள் தொலைபேசியி இலக்கத்தில் Viber Active செய்யவில்லை என்றால் இப்படி வரும் அதனால் Viber Active செய்த இலக்கங்களை பதிவு செய்யுங்கள்.


07.உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் இரகசிய இலக்கத்தை இதனுள் பதிவு செய்து தொடருங்கள். Enter viber ஐ அழுத்துங்கள்.



How to Install Viber on Windows 8, 7 PC for Free Calling VIDEO 


றவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்புறவு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது உணர்ச்சியை,கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
தோள் கொடுப்பான் நண்பன்” என்று சும்மாவா சொன்னாங்க… ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில்,அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். மேலும் இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் இருக்கும்.
இவ்வுலகில் எந்த ஒரு உறவிற்கும் பிரிவு இருக்கும். ஆனால் நட்புக்கு பிரிவு இருக்காது என்று நினைக்கிறோம். ஆனால் அத்தகைய உறவிலும் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது. அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் நம்மை விட்டு விலக நினைக்கிறார்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அது என்ன அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு நண்பர் எந்த நேரத்திலும் தம்முடன் இருக்கும் போது,வேலை இருக்கிறது என்று அடிக்கடி சொல்வதைக் கொண்டு, அவர் தம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். சிலர் இந்த விலகலுக்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
 இதுவரை நண்பனாக இருந்து, எப்போதும் தனக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசியவர்கள், திடீரென்று அதனை தவிர்த்து, வேறு ஏதாவதொன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அதனைக் கொண்டும் அவர்களின் பிரிதலுக்கான எண்ணத்தை புரிந்து கொள்ளலாம்.
 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தினம் தினம் ஒரு நண்பர்கள் கிடைப்பார்கள். அப்போது அவர்கள் வெளியே செல்லும் போது தம்மை அழைக்காமல்,அடிக்கடி புது நண்பர்களுடன் தனியாக சென்றாலும், அதனைக் கொண்டும் அவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் அவசரப் பட்டு நண்பர்களை தவறாக நினைக்காமல்,அவர்களுடன் மனம் விட்டு பேசி தெரிந்துக் கொண்டு, பின் எதையும் நிர்ணயிக்க வேண்டும்.
 உறவுகளுக்குள் பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதற்கு பொறாமையும் ஒரு காரணம். அத்தகைய பொறாமையானது புனிதமான நட்புறவைக் கூட பிரித்துவிடும். அதிலும் பொறாமை, துணை அல்லது வேறு ஏதாவது புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டால் ஏற்படுவது தான். இத்தகைய பொறாமை வெளிப்படையாக தெரியாது. ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்களில் நன்கு புலப்படும். இதை வைத்தும் நட்புறவு முறியப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம். வேறு ஏதாவது நட்புறவை முறிக்கும் காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
GM

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை.
சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங்காயம்தான்.
வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?
வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும்.
வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி, அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க....
அழகாக மாற உதவும்...
உஷ்ணக் கடுப்பு அகல
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு
மூளையின் சக்தி பெருகும்
ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை
பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு, வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி 100 கிராம் அளவு சேகரித்து சாறு எடுத்து பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க குணம் தெரியும்.
உடல் அயர்வும் வலியும் நீங்க
குடல் புழுக்கள் நீங்க
குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.
பால் சுரப்புக்கு
குழந்தைப் பேறுக்குப் பிறகு சில தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் இருந்து விடுவதுண்டு
பசுவின் பாலில் இரண்டொரு வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி பூண்டை சாப்பிட்டு பாலை குடித்து விட வேண்டும்.




எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.




வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.
பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.




பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.

பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.



அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.




தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும்.
எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
இச்செயன்முறைக்கு PDF to Text Converter எனும் மென்பொருளானது பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. 
இம்மென்பொருள் மூலம் தனிப்பட்ட ஒரு கோப்பினையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களினையோ மிகவும் இலகுவான முறையில் ஒரே நேரத்தில் Text கோப்பாக மாற்றியமைக்க முடியும்.
அத்துடன் ஒரு கோப்பின் குறிப்பிட்ட சில பக்கங்களையோ அல்லது அனைத்து பக்கங்களையுமோ Text மாற்றியமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருளின் செயற்பாட்டிற்கு Adobe Acrobat Reader மென்பொருளோ அல்லது எந்தவிதமான Print Driver மென்பொருட்களோ கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கம் செய்து பயன்பேறுங்கள். இது முற்றிலும் இலவசம் இதை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தரவிறக்க சுட்டியை அழுத்துங்கள்.

         தரவிறக்க சுட்டி       



சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.
பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.
நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.
பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.
இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

பூண்டுடன் பால்
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.
அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget