பொது இடங்களில் MEMORY அல்லது USB வாங்க கூடாது ஏன்...?
நாம் பொது இடங்களில் ஏன் Memory அல்லது Usb வாங்க கூடாது? உங்களின் சந்தேகங்களை இப்போது பார்ப்போம்! நண்பர்களே, நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசி அல்லது கணினியில் பயன்படுத்த ஒரு Memory அல்லது Usb வாங்குவது என்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்! ஆனால் அதை நாம் பொது இடங்களில் வாங்காமல் நம்முடைய அருகில் இருக்கும் கடைகளில் அல்லது உங்களுக்கு நம்பிக்கையான கடைகளிலும் வாங்குவது நல்லது. ஆம் நண்பர்களே! ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசி அல்லது கணினியில் பயன்படுத்த ஒரு Memory அல்லது Usb வாங்குவது, ஆனால் அதை நாம் கணினியில் பயன்படுத்தும் போது அந்த Memory அல்லது Usb ஒரு முறை அல்லது இரண்டு முறை கணினியில் காட்டும் அதை நாம் நம்முடைய வாகனத்தில் ஏதாவது பாடல்கள், கேட்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அது வேலை செய்யாது ஏன் என்றால் அது முற்றிலும் போலியான Memory அல்லது Usb யாக இருக்கும். அது மட்டுமல்ல! அந்த Memory அல்லது Usb யில் கணினியில் இருந்து பாடல்களை ஏற்றும் போது ஒரு பாடல் அல்லது குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் தான், நீங்கள் ஏற்ற முடியும். அது ஏன் என்று தெரியவில்லையா? அதாவது நீங்கள் ஒரு Memory அல்லது Usb வாங்குவீற்கள் அதில் எழுதி இருக்கும் GB1, 2 ,4,8,16,32 என்ற எழுத்தை நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் அந்த Memory அல்லது Usb அதில் எழுதி இருக்கும் எழுத்து தரத்துடன் இருப்பதில்லை. நாம் கணினியில் அந்த Memory அல்லது Usb ஐ திறந்து பார்க்க முடியும். அதில் GB1, 2 ,4,8,16,32 என்று நம் கணினியில் காண்பிக்கும் ஆனால் அது உண்மை இல்லை. ஏன் என்றால் நாம் வாங்கும் போலியான Memory அல்லது Usb களின் உள்ளே லூப் செய்ய ப்பட்டுள்ளது அதாவது லூப் என்று நான் சொன்னது நீங்கள் உங்கள் Memory அல்லது Usb கணினியில் பார்க்கும் போது அதில் குறிப்பிட்ட GB நம்முடைய கணினியில் காண்பிக்கும் ஆனால் அது லூப் செய்யப்பட்டுள்ளது அது உங்கள் Memory அல்லது Usb அளவை மாத்திரமே காண்பிக்கும். பாடல்களை ஏற்ற முடியாது, ஆம் நண்பர்களே! அது மட்டுமல்ல ஒரு சில கையடக்க தொலைபேசியில் Memory ஐ போட்ட பின், உங்களுக்கு தேவையான அனைத்து (சாப்ட்வேர்) மென்பொருள் பாடல்களை ஏற்றும் வகையில் இருக்கும் ஆனால் அதை கழட்டி விட்டு மீண்டும் போட்டால் format கேட்கும். அதனால்தான் சொல்கிறேன் பொது இடங்களில் வாங்க கூடாது, ஏன் இப்படி பொது இடங்களில் வாங்க கூடாது என்றால், நீங்கள் ஒரு Memory அல்லது Usb வாங்கி பேருந்தில் ஏறி சென்றுவிடலாம். நாளை அந்த இடத்தில் பார்க்கும் போது நீங்கள் Memory அல்லது Usb வாங்கிய ஆட்களை பார்க்க முடியாது! இதே Memory அல்லது Usb கடையில் வாங்கி இருந்தால் நாளை கூட மாற்ற முடியும். போலியை கண்டு ஏமாற்றம் வேண்டாம். ஆம் நண்பர்களே! நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் போலியான வியாபாரம் செய்ய நினைப்பவர்களை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் போலியை கண்டு ஏமாராதீற்கள்.