உங்கள் நண்பர்கள் ஒரு தவறு செய்வதர்க்கு நீங்களே காரணமாக உள்ளீர்கள். ஏன்...? என்ற கேள்வி உங்கள் முன் எளலாம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஒரு கடையிலோ, அல்லது வீதியிலோ, நிற்க்கும் போது ஒரு சிலர் ஓரமாக ஒதுங்கி நிப்பார்கள் ஒரு சிலர் வேண்டும் என்றே மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நின்றுகொண்டிருப்பார்கள் அதை யாரவது தட்டிக்கேட்க முன் வந்தால் அவருடன் சண்டை போடுவது அப்படி உங்கள் நண்பர் சண்டை போடுவதை பார்த்து நீங்களும் உங்கள் நண்பருடன் சேர்ந்து சண்டை போடுவது இதுதான் நீங்கள் உங்கள் நண்பரை தவறு செய்ய தூண்டும் முதல் படி அதே இடத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தப்பு யார் பக்கம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பின் அவர்களை சமாதானம் செய்வது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். உங்கள் நண்பர் பக்கம் தப்பு உள்ளது என்றால் நீங்கள் நேரடியாக அனைவருக்கும் மத்தியில் அதை சொல்வது தவறு நீங்கள் சொல்லும் விடயம் சரியாக இருந்தாலும் சொல்லும் இடம் தவறானது ஏன்...? என்றால் உங்கள் நண்பருக்கு மற்றவர் முன்னால் சொல்லும் போது அவர் மனதில் ஒன்றை மட்டுமே நினைப்பார் நீங்காள் அவரை அவமான படுத்துவதாக உணர்வார் அதனால் அவருடன் சேந்து சண்டை போட வேண்டாம். அந்த பிரச்சனை முற்றாமல் முடித்து வைக்க பார்ப்பது புத்திசாலித்தனம். நண்பர்களுக்கு உயிரையும் கொடுக்க வேண்டும். அதற்க்காக மற்றவர்களின் உயிரை எடுக்க வைப்பது தவறு. எப்படி...? நீங்கள் உங்கள் நண்பரிடம் நல்ல பழக்கவழக்கங்களை அவருடைய மனதில் பதியும் அளவிற்க்கு புத்தி சொல்லுங்கள். புத்தி சொல்லவா...? ஆம் புத்தி சொல்வதென்றால் அப்பா அம்மா சொல்வது போல் அல்ல...! நீங்கள் உங்கள் நண்பருடன் எவ்வளவு பேசுவீர்கள் அந்த நேரம் ஒரு சில நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று நடக்கும் விடயம் நாளை நமது உறவினர்களுக்கும் வரலாம். ஒரு பிள்ளையை உங்களுடன் அனுப்பும் குடும்பம் மன சஞ்சலத்துடன் அனுப்பி வைக்க கூடாது. உங்கள் பெயரை சொன்னால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு மரியாதை வர வேண்டும். உங்களை மற்றவர்கள் ஒரு விடயத்தில் தங்களது வேலைக்காக உங்களை தூண்டி விடுவர்கள் அதில் உண்மை என்ன ? என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொண்ட பின் அதில் இறங்குவது உங்களுக்கு நல்லது.